கஞ்சா பதுக்கியவர் கைது
தேனி : உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு எஸ்.ஐ., முருகானந்தம் தலைமையிலானபோலீசார் கூடலுார் சீலையசுவாமி கோயில் அருகில் ரோந்து சென்றனர்.
அப்போது கூடலுார் காந்திகிராமம் தெற்குத்தெரு குமரன் 41, ரூ.1140 மதிப்புள்ள 114 கிராம் உலர் கஞ்சாவை விற்பனைககாக வைத்திருந்தார். அவரை கைது செய்து போலீசார்,உலர் கஞ்சாவை கைப்பற்றினர்.
விசாரணையில் கைதான குமரன், கஞ்சாவை கூடலுார் வியாபாரி சிவநேசன், வேறு நபரிடம் கொடுத்து வர சொன்னதாக தெரிவித்தார். போலீசார் சிவநேசனை தேடி வருகின்றனர்.