மின்சாரம் தாக்கி தொழிலாளர் பலி
மூணாறு, ஜன. 3: மறையூர் அருகே தனியார் தேயிலை நிறுவனத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் கணேசன் (48) இவர் தேயிலை தோட்டத்தில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். அதோடு நான்கு கறவை பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காபி தோட்டத்துக்கு காவல் வேலைக்கு செல்லும் வேளையில் தேயிலைத் தோட்டத்தின் நடுவே உள்ள மரத்தில் பசு மாட்டிற்கு தீவனம் சேர்ப்பதற்காக மரத்தில் ஏறி கிளைகளை வெட்ட முயன்ற போது, மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். நேற்று காலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் மரக்கிளையில் இறந்து கிடந்ததை கண்டனர். உடனே தொழிலாளர்கள் மறையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மரத்தின் மேலே சென்ற மின்சார கம்பியை கவனிக்காமல் மரக்கிளையை வெட்டிய போது மின் கம்பி அறுந்து விழுந்து இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.தொடர்ந்து கணேசனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக இடுக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.