மகளிர் கல்லுாரியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
கூடலுார்: கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி முன்னிலையில் நடந்தது. முதல்வர் ரேணுகா வரவேற்றார்.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மேலாளர் மார்டின் ரூசோ மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார். சுயதொழில் செய்பவர்களுக்கு வழங்கப்படும் கடன், அரசு திட்டங்களில் தொழில் பயிற்சிகள், செயல்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் வாணி, பேராசிரியை சண்முகப்பிரியா, விரிவுரையாளர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்