பா.ஜ.,வினர் மீது வழக்கு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் காமாட்சி, நேற்று முன் தினம் பா.ஜ., துண்டை கழுத்தில் அணிந்து க. விலக்கில் உள்ள டாஸ்மாக் கடையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவப்படத்தை ஒட்ட தனது நண்பருடன் சென்றுள்ளார்.
டாஸ்மாக் பணியாளர்கள் அதனை தடுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. க.விலக்கு டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் சந்திரசேகரன் புகாரில் க.விலக்கு போலீசார் காமாட்சி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.