தேனி பஸ் ஸ்டாண்டில் சேதமடைந்த பாலம்
தேனி : தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் மூன்றாவது பிளாட்பாரத்தில் டவுன்பஸ்கள், கோவை, திருப்பூர் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன
இந்த பிளாட்பாரங்கள் நுழைவு பகுதியில் கழிவுநீர் வடிகால் மீது அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. பாலம் அமைக்க கான்கிரீட் கொட்டப்பட்ட பகுதியில் கம்பிகள் வெளியில் தெரிகின்றன. நடந்து செல்லும் பயணிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது. இந்த சேதமடைந்த பகுதியை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.