ஆன்லைன் வர்த்தகம் என மோசடி ரூ.பல லட்சங்களை இழந்த தொழிலாளர்கள்
மூணாறு: மூணாறில் ரூ.6 ஆயிரம் முதலீடு செய்தால் பிரபல கம்பெனிகள் பெயரில் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்து தினமும் நூற்றுக் கணக்கில் சம்பாதிக்கலாம் என ஒரு கும்பல் ஆன்லைன் வாயிலாக வலை விரித்தது. அதனை உண்மை என நம்பி தோட்டத் தொழிலாளர்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினர் மோசடி கும்பல் அளித்த கியூ.ஆர். கோடு மூலம் ரூ. 6 ஆயிரம் வீதம் செலுத்தினர். அவர்களுக்கு ஆரம்பத்தில் லாப விகிதம் என தினமும் ரூ.650 வரை வழங்கினர். அதனை அறிந்த ஏராளமானோர் குடும்பதினரின் ஒவ்வொருவரின் பெயரிலும் ரூ.6 ஆயிரம் வீதம் செலுத்தினர்.
லாப விகிதம் கிடைக்காததால் மோசடி கும்பலை தொடர்பு கொண்டபோது, வங்கியில் கே.ஒய்.சி. இணைய தளம் பதிவு செய்ய வேண்டும் என கூறி மீண்டும் ரூ.6 ஆயிரம் வீதம் கேட்டதால் மோசடி அம்பலமானது. இதனிடையே மோசடி கும்பல் தங்களில் தொடர்பை துண்டித்ததுடன் டிச.18 முதல் ஆன்லைன் சேவையும் முடங்கியது.
இந்த மோசடியில் தோட்ட தொழிலாளர்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் ரூ.பல லட்சங்களை இழந்தனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்க பாதிக்கப்பட்டவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.