ஆதரவற்ற பெண்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம்
தேனி : மாவட்ட சமூக நலம்,மகளிர் உரிமைத்துறையின் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற, கைவிடப்பட்ட பெண்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. இதில் ஆதரவற்ற மகளிர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை, ஆதார் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை கோரிக்கை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 73 மனுக்கள் வழங்கப்பட்டன. இம்மனுக்களுக்கு விரைவில் தீர்வு கான துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.
நிகழ்வில் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி, கலெக்டரின்நேர்முக உதவியாளர் (விவசாயம்) வளர்மதி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.