வைகை அணையில் மீன் வரத்து குறைவு மார்கழியால் விற்பனையில் மந்தம்
ஆண்டிபட்டி: வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பிடிபடும் மீன்களின் எண்ணிக்கை குறைகிறது. தற்போது மார்கழி மாதம் என்பதால் விற்பனையும் மந்த நிலையில் உள்ளது.
வைகை அணையில் மீன்வளத்துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் கட்லா, மிருகாள், ரோகு வகையைச் சேர்ந்த பல லட்சம் மீன் குஞ்சுகள் வளர்ப்புக்கு விடப்படுகின்றன. அணையில் இயற்கையாக வளரும் ஆறா, சொட்டை வாளை, கெளுத்தி, கெண்டை வகை மீன்களும் உள்ளன. வளர்ந்த மீன்களை பிடித்து விற்பனை செய்ய டெண்டர் விடப்பட்டு தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மீனவர் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற மீனவர்கள் அன்றாடம் வைகை அணையில் மீன் பிடித்து அதனை ஒப்பந்ததாரிடம் கொடுத்து அதற்கான சம்பளத்தை பெற்று செல்கின்றனர்.
அணையில் பிடிக்கப்படும் மீன்களை பொதுமக்கள், வியாபாரிகள் அன்றாடம் வாங்கி செல்கின்றனர்.
மீனவர்கள் கூறியதாவது: கடந்த சில வாரங்களாக வைகை அணை நீர்மட்டம் 60 அடியை கடந்துள்ளது. அணை நீர்மட்டம் 71 அடி. நீர்மட்டம் 50 அடிக்கும் அதிகமாக உயரும்போது பிடிபடும் மீன்களின் அளவு குறைந்து விடும். தற்போது வைகை அணையில் தினமும் ஒரு டன் அளவிலான மீன்கள் பிடிக்கப்படுகிறது. வைகை அணை மீன்களுக்கு சுவை அதிகம் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்வர்.
தற்போது சபரிமலை சீசன், மார்கழி மாதம் என்பதால் மீன்களுக்கான தேவை குறைந்து விற்பனையில் மந்தம் நிலவுகிறது. அணை நீர்மட்டம் 40 அடிக்கும் கீழே குறையும் போது 3 டன்னுக்கும் அதிகமான மீன்கள் பிடிபடும். தற்போது மீன்பிடி ஒப்பந்ததாரர் மூலம் மீனவர்களுக்கு கிலோ ரூ.110 விலையிலும், பொதுமக்களுக்கு கிலோ ரூ.130ஆகவும் விலை நிர்ணயம் உள்ளது என்றன