மானிய மின் மோட்டார் பெற விண்ணப்பிக்கலாம்
தேனி: வேளாண் பொறியியல் துறை சார்பில் மின்மோட்டார் மானிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
இத்திட்டம் பற்றி வேளாண் பொறியியல் துறையினர் கூறியதாவது: பழைய, திறன் குறைந்த மின்மோட்டார்கள் பயன்படுத்துவதால் மின் நுகர் அதிகமாகிறது. இதனால் பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் நேரமும் அதிகரிக்கிறது. அதிக மின் நுகர்வை தவிர்க்க சிறு, குறு விவசாயிகள் பழைய மின் மோட்டர்களை மாற்ற இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தேனி, உத்தமபாளையத்தில் உள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.