ரூ.1000 கோரி ஆர்ப்பாட்டம்
ஆண்டிபட்டி: ரேஷன் கடைகளில் தைப்பொங்கல் தொகுப்பாக அரிசி, சர்க்கரை ஜீனி தலா ஒருகிலோ, கரும்பு ஆகியவை வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.1000 வழங்கும் அறிவிப்பு இன்னும் வரவில்லை. பொங்கல் தொகுப்புடன் ரூ.1000, இந்த ஆண்டும் வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூ.,சார்பில் ஆண்டிபட்டி – தெப்பம்பட்டி ரோடு சந்திப்பு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, நகர் செயலாளர் முனீஸ்வரன் மாவட்ட துணை செயலாளர் பரமேஸ்வரன் உட்பட பலர் பேசினர்.