குழந்தை திருமணத்தை தவிர்த்து படிக்க வையுங்கள் கலெக்டர் வேண்டுகோள்
தேவதானப்பட்டி: பழங்குடியினர் குழந்தை திருமணங்களை தவிர்த்து, படிக்க வைக்க வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்தார்.
தேவதானப்பட்டி பேரூராட்சி 5 வது வார்டு மஞ்சளாறு அணை அருகே ராசிமலையில் பழங்குடியின மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நேற்று ராசிமலையில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. கலெக்டர் பேசுகையில்: பழங்குடியினர் மக்கள் குழந்தை திருமணத்தை நடத்துவதை தவிர்த்து, பெண்களுக்கு 20 வயதுக்கு மேல் திருமணம் நடத்தினால் அவர்கள் உடல், மனம் பக்குவபட்டு இருப்பார்கள். எனவே குழந்தைகளை படிக்க வையுங்கள் என்றார். மருத்துவத்துறை உட்பட பல்வேறு துறைகளிலிருந்து ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தேவதானப்பட்டி பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி, துணை தலைவர் நிபந்தன் பங்கேற்றனர்.-