பசுக்களை கொன்ற புலிகள்
மூணாறு அருகே குட்டியாறுவாலியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், தனக்குச் சொந்தமான இரண்டு கறவை பசுக்களை நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு அருகில் உள்ள பகுதிக்கு கொண்டு சென்றார்.
அங்கு திடிரென வந்த இரண்டு புலிகள் மேய்ந்து கொண்டிருந்த இரண்டு பசுக்களை ரமேஷின் கண் முன் தாக்கி இழுத்துச் சென்றன. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்ததவர் ஆட்களை அழைத்து வர குடியிருப்பு பகுதிக்கு சென்றார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு ஆட்களுடன் சென்ற போதும் பசுக்களை காணவில்லை. அப்பகுதியில் தேடியபோது அரை கி.மீ., தொலைவில் காட்டினுள் உடல் பாதி தின்ற நிலையில் இரண்டு பசுக்களும் இறந்து கிடந்தன. அச்சம்பவம் குட்டியாறுவாலி பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.