Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

மண் பானைகளுக்கு மவுசு அதிகரிப்பால் தொழிலாளர்கள் உற்சாகம் : பொங்கல் பண்டிகைக்கு மண்பாண்டங்கள் தயாரிப்பு மும்முரம்

பெரியகுளம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரியகுளம் பகுதியில் பொங்கல் வைக்க மண்பானைகள் தயாரிப்பு மும்முரம் அடைந்துள்ளது. மண்பாண்ட பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பால் தொழிலாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பொங்கல் நாளில் வீட்டின் வாசலில் விறகு அடுப்பில் புது மண்பானையில் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம்,நெய், முந்திரிபருப்பு கலந்து குடும்பத்தினரோடு பொங்கல் வைத்து பொங்கல் பொங்கி வரும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என குலவை ஓசையிட்டு சூரியனை வழிபடுவது மரபு.

எந்திர வாழ்க்கையில் மண்பானைகளின் பயன்பாடு குறைந்து பித்தளை, சில்வர், அலுமினியம் பாத்திரங்கள் பயன்பாடு அதிகரித்ததால் மண்பாண்டங்களில் தேவை குறைந்துவிட்டது. ஆனாலும் பொங்கல் நாளில் மண் பானையில் பொங்கல் வைப்பதை பலரும் விரும்புகின்றனர்.

ஓட்டல்களில் வரவேற்பு பெறும் மண்பனை

மாவட்டத்தில் பெரியகுளம் ஒன்றியம் டி.கள்ளிப்பட்டி, கைலாசபட்டி, புல்லக்காபட்டி மற்றும் பூதிப்புரம், போடி பகுதியில் குலாளர் இன மக்கள் பலரும் தங்கள் குலத்தொழிலாக மண்பாண்டங்கள் தயார் செய்து வருகின்றனர். பொங்கல் பானையும், காணும் பொங்கலுக்கு சிறிய அளவிலான பருப்பு சட்டி, அசைவ பிரியர்கள் ருசிக்க சிறிய அளவிலான மீன் சட்டி தயாராகி வருகிறது.

வாரம் இருமுறை 3 ஆயிரம் பானைகள் வெளியூர்களுக்கு அனுப்பப்படுகிறது. ஓட்டல்களில் மண்பானை சமையல் என போர்டு எழுதி வைத்திருப்பதை பார்த்து பலரும் ஆர்வமாக அங்கு சாப்பிட செல்வது மண்பாண்டங்களுக்கு உள்ள மவுசு அதிகரித்துள்ளது.

பானை அளவுக்கு ஏற்ப விலை

சுரேஷ், உற்பத்தியாளர், டி.கள்ளிப்பட்டி: பெரியகுளம் கண்மாய், பாப்பியம்பட்டி கண்மாய் களிமண் எடுத்து மண்பாண்டங்கள் தயாரிக்கிறோம். களிமண்ணை பக்குவப்படுத்தி, செம்மண் கரைசல் பூசி, சூளையில் நெருப்பிட்டு தயாரிக்கிறோம்

இவற்றை கேரளா, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புகிறோம். மார்கழி துவக்கத்திலே ஆர்டர் வரும். பொங்கல் பானைகள் 4 லி., 3 லி., 2 லி., 1 லி., அரை லிட்டர் அளவுள்ள பானைகளாக தயாரித்து வருகிறோம். பானை அளவுக்கு ஏற்ப ரூ.400 முதல் ரூ.100 வரை விற்கிறோம். உழைப்புக்கு ஏற்ப மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். பொங்கல் விழா சமயத்தில் ரூ.5 ஆயிரம் அதிகம் கிடைக்கும்.

மூலப்பொருளான மண் டிராக்டரில் மண் எடுக்க அனுமதி தர மறுக்கின்றனர். மாட்டு வண்டியில் எடுத்து வருவதால் செலவு அதிகரிக்கிறது. மண்பாண்ட தொழிலை ஊக்குவிக்க வருவாய் துறை ‘பாஸ்’ வழங்க வேண்டும். என்றார்.-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *