உலக அமைதி தின விழா
அல்லிநகரம் பாக்கியா மெட்ரிக்பள்ளியில் தேனி கரூர் வைசியா வங்கி தேனி கிளை சார்பில் உலக அமைதி தினவிழா நடந்தது.
வங்கி மேலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பரந்தாமன் முன்னிலை வகித்தார்.
விழாவில் மாணவர்களுக்கு ஓவியம், மாறுவேடம், பேச்சுப்போட்டி, கட்டுரை, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவினை பள்ளி ஆசிரியர் வினோத்குமார், கார்த்திகேயன் ஒருங்கிணைத்தனர்.