ஆன்லைன் வர்த்தகம் மோசடி விழிப்புடன் இருக்க வேண்டுகோள்
மூணாறு: ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் நடக்கும் மோசடியில் சிக்காமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு இடுக்கி எஸ்.பி. விஷ்ணுபிரதீப் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மூணாறு சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் ‘ஆன்லைன்’ வர்த்தகம் என்ற பெயரில் ரூ. பல லட்சங்களை இழந்தனர். இது தொடர்பாக இடுக்கி எஸ்.பி. விஷ்ணுபிரதீப் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: மூணாறு பகுதியில் நடந்த ஆன்லைன் வர்த்தகம் மோசடி தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அது போன்ற மோசடிகளில் சிக்காமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆன்லைன் மோசடி நடந்த ஒரு மணி நேரத்திற்குள் 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளம் மூலம் தகவல் அளித்தால், இழந்த பணத்தை மீட்க வாய்ப்புள்ளது, என பதிவிட்டுள்ளார்