கடமலை மயிலாடும்பாறை ஒன்றியத்தில் ரூ.1.85 கோடியில் சிறப்பு திட்ட பணிகள்
தேனி: கடமலை மயிலாடும்பாறை ஒன்றியத்தில் சிறப்பு திட்டத்தில் ரூ.1.85கோடி மதிப்பிலான மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இத்திட்டம் ‘போக்கஸ் பிளாக்’ என அழைக்கப்படுகிறது. தேர்வான ஒன்றியத்தில் அரசு துறைகள் சார்பில் அடிப்படை கட்டமைப்புகளை வசதி மேம்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. இத் திட்டத்தில் கடமலை மயிலாடும்பாறை ஒன்றியம் தேர்வாகி உள்ளது. இங்கு இந்த நிதியாண்டில் ரூ.1.85 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடக்கிறது.
பணிகள் பற்றி அதிகாரிகள் கூறியதாவது:
இந்த ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 வில் மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு மாலையிலும் சனிகிழமைகளில் முழுநேரம் சிறப்பு வகுப்புகள் நடக்கிறது.
பிளஸ் 2 படிக்கும் 250 மாணவர்களை தேர்வு செய்து உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க உள்ளோம். முறுக்கோடை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிய ஆய்வகம் அமைக்கப்படுகிறது.
இதுதவிர 28 பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களுக்கு மத்திய அரசின் சிறப்பு சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.