கால்நடை கணக்கெடுப்பு கலெக்ட ர் வேண்டுகோள்
தேனி : மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு கால்நடை வளர்ப்போர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும என கலெக்டர் ஷஜீவனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: கால்நடை கணக்கெடுப்பில் 16 வகையான விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. மாவட்டத்தில் 4.35 லட்சம் குடியிருப்புகள் உள்ளன.
இதில் 1.10 லட்சம் வீடுகளில் கணக்கெடுக்கபட்டு 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. கணக்கெடுத்த வீடுகளில் அடையாளமாக ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. வீடுகளுக்கு கணக்கெடுப்பாளர்கள் வரும்போது கிடை, மேய்ச்சல் மாடுகள், கோழிப்பண்ணைகள், நாட்டுக்கோழிப் பண்ணைகள், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், கோயில் மாடுகள், செல்லப்பிராணிகள் எண்ணிக்கை, பால் கறவை இயந்திரங்கள், குஞ்சு பொறிப்பான் உள்ளிட்ட உபகரணங்களின் விபரங்களையும் தெரிவித்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோரியுள்ளார்