Wednesday, April 16, 2025
மாவட்ட செய்திகள்

தொழில் முனைவோராக விண்ணப்பிக்கலாம்

தேனி : ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில் புதிரை வண்ணார் சமூகத்தினர் தொழில் முனைவோர் ஆகும் வகையில் முதல்வரின் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தில் (CM ARISE) மொத்த மதிப்புத் தொகையில் 35 சதவீதம், அல்லது ரூ.3.50 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும். தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்

புதிரை வண்ணார் சமூகத்தினர் இத் திட்டத்தின் கீழ்http://newscheme.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ, கலெக்டர் அலுவலகம், தேனி முகவரியில் நேரிலும், 04546 – 260995 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் ஷஜீவனாதெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *