போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு
தேனி; தேனி அருகே ஈஸ்வர் நகரில் உள்ள போதை நுண்ணறிவுப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் ஜன.11 அதிகாலை கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதுபற்றி அருகில் குடியிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ரோந்து போலீஸ்காரர் முருகேசன் 35, கொள்ளையன் நித்திஷ்குமாருடன் சண்டையிட்டு காயமடைந்தார். உடன் சென்ற சிறப்பு எஸ்.ஐ., ரமேஷ் 50, நித்திஷ்குமாரை பிடித்தார்.
தப்பி ஓடிய மற்றொரு கொள்ளையன் உதயகுமாரை அல்லிநகரம் போலீசார் பிடித்தனர். கொள்ளையடித்த துப்பாக்கி, கஞ்சா, கஞ்சா ஆயில், மெத்தம்பட்டமைன் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. கொள்ளையர்களை பிடித்த போலீஸ்காரர் முருகேசன், சிறப்பு எஸ்.ஐ., ரமேஷ் ஆகியோரை நேரில் அழைத்து எஸ்.பி., சிவபிரசாத் பாராட்டி சான்றிதழ், விருது வழங்கினார்.