தேனீக்கள் கொட்டி 30 பேர் காயம்
கம்பம்; சுருளி அருவி அருகே உள்ள கோயிலில் பொங்கல் வைத்து விட்டு திரும்பிய போது தேன் கூட்டில் பறவை கொத்தியதால் வெளி கிளம்பிய தேனீக்கள் கூட்டம் கடித்ததில் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சுருளிப்பட்டியை சேர்ந்த சில குடும்பத்தினர் சுருளி அருவி ரோட்டில் கருநாக்கமுத்தன்பட்டி விலக்கில் உள்ள கோயில் ஒன்றில் தை முதல் நாளில் பொங்கல் வைப்பது வழக்கம். நேற்று காலை பொங்கல் வைத்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த – போது அருகில் உள்ள புளியந்தோப்பில் இருந்த தேன் கூட்டை பறவை ஒன்று கொத்தியது. இதனால் கூடு கலைந்து ஆயிரக்கணக்கான தேனீக்கள் கிளம்பி, அருகில் இருந்த இவர்களை கொட்டியது. மேலும் அருவிக்கு சென்றவர்களையும், ரோட்டில் நடந்து சென்றவர்களையும் கொட்டியது.
இதில் 30 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டனர். காமயக் கவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், கம்பம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.