அப்பாச்சி பண்ணையில் குவிந்த கேரள சுற்றுலா பயணிகள் – ஓணம் விடுமுறை எதிரொலி
கேரளாவில் ஓணம் விடுமுறையால் தமிழகப் பகுதியான கூடலுார் அப்பாச்சி பண்ணையில் திராட்சை தோட்டங்களை பார்க்க கேரள சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.
கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பலர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து முக்கிய திருவிழாவான ஓணம் பண்டிகைக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
இருந்த போதிலும் ஓணம் விடுமுறையை பயன்படுத்துவதற்காக கேரள மக்கள் தமிழகப் பகுதி நோக்கி அதிகம் படையெடுக்க துவங்கினர். நேற்று கூடலுார் அருகே அப்பாச்சி பண்ணையில் திராட்சை தோட்டங்களை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான கேரள சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியில் குவிந்தனர். நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்ததால் அப்பகுதியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.