பணி நிரந்தரம் கோரி ஜன.26ல் காத்திருப்பு போராட்டம் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு
தேனி:தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் அரசு துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் பணிநிரந்தரம் என்பதை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் ஜன.,26ல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் கோதண்டம் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: டாஸ்மாக்கில் பலர் 21 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பார்கள் இன்றி செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ஜன.26ல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். ஜன.,20ல் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிகாரிகள் அழைத்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், ஜன.,27 முதல் டாஸ்மாக்கை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்