Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

தொழில் நுட்ப பயிற்சியாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி: தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர், பிராட் பேண்ட் டெக்னிஷியன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இப்பயிற்சிக்கு பிளஸ் 2 தேர்ச்சி, ஐ.டி.ஐ., டிப்ளமோ அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்ததும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தாட்கோ அலுவலகத்தை நேரில் அல்லது 04546 260 995 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *