அடையாள அட்டை வழங்கல்
தேனி. மார்ச் 20: இந்து வியாபாரிகள் நல சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்து முன்னணி அமைப்பின் இந்து வியாபாரிகள் நல சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று தேனியில் நடந்தது. விழாவிற்கு பட்டாசு கடை நிர்வாக இயக்குனர் குமரேசன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட தலைவர் முருகன் முன்னிலை வகித்தார்.
விழாவில் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இந்து வியாபாரிகள் நல சங்கத்தின் உறுப்பினர்கள் 100 பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு மாவட்ட செயலாளர் உமையராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.