முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தேனி : மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தேனி நகர அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, பழைய பஸ் ஸ்டாண்டு அருகே, எம்.ஜி.ஆரின் படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் கிருஷ்ணக்குமார் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு:
தேனி அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில், அல்லிநகரம் தொடக்க வேளாண் கூட்டுறவுகடன் சங்கத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நகரச் செயலாளர் ரெங்கநாதன் தலைமையில் மாவட்ட துணைச் செயாலளர் முருகேசன், நகர துணைச் செயலாளர் மயில்வேல் முன்னிலையில் நடந்தது.
பெரியகுளம்: நகர அ.தி.மு.க., சார்பில் பழைய எம்.ஜி.ஆர்., படத்திற்கு மாலை அணிவிப்பு விழாவிற்கு நகர செயலாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். துணை செயலாளர் வெங்கடேசன்,முன்னாள் எம்.எல்.ஏ., பெரியவீரன் பங்கேற்றனர். தேவதானப்பட்டி எம்.ஜி.ஆர்., சிலைக்கு அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகுரு, பொதுக்குழு உறுப்பினர்கள் தவமணி, கருப்பசாமி பங்கேற்றனர்.
ஆண்டிபட்டி: அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவையொட்டி எம்.ஜி.ஆர்., சிலைக்கும், அவரது படத்திற்கும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். மாவட்டச் செயலாளர் ராமர், ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன், நகர் செயலாளர் அருண்மதிகணேசன் முன்னாள் எம்.எல்.ஏ.,தவசி உட்பட பலர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அ.ம.மு.க., சார்பில் மாவட்டச் செயலாளர் காசிமாயன் ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்கள் திருமலை நாகராஜ், ரவிக்குமார், நகர செயலாளர் வச்சிரவேல் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
கூடலுார்: நகரச் செயலாளர் அருண்குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. பழைய பஸ் ஸ்டாண்ட், புது பஸ் ஸ்டாண்ட், கன்னிகாளிபுரம், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எம்.ஜி.ஆரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வார்டுகளில் பொங்கல் வைத்து வழங்கப்பட்டது. கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் சோலைராஜ், நகர துணை செயலாளர் பாலைராஜா உள்ளிட்ட நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.