காங். , சட்ட சபை தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்
தேனி: மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு காங்., கட்சியின் சட்டசபை தொகுதி அமைப்பாளர்களை நியமித்து மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஆண்டிபட்டி தொகுதிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னபாண்டி, கனி, பெரியகுளம் (தனி) தொகுதிக்கு தேனி மாவட்டச் செயலாளர்முகமது சம்சுதீன், செயற்குழு உறுப்பினர் சையது அபுக்கர் சித்திக், போடி தொகுதிக்கு மாவட்ட துணை தலைவர் சன்னாசி மற்றும் சதாசிவம். கம்பம் தொகுதிக்கு முன்னாள் இளைஞர் காங்., நிர்வாகி சிந்தன், சமூக ஊடகப்பிரிவு நிர்வாகி இம்ரான்கான் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர் என மாவட்டத் தலைவர் முருகேசன் தெரிவித்தார்.