இளம் பெண் மாயம்
ஆண்டிபட்டி : வைகை அணையைச் சேர்ந்தவர் ஈஸ்வரி, தனது கணவர் 15 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார்
மகள் நிவேதா 23, மகன் லோகநாதன் 22, ஆகியோருடன் வைகை அணை பூங்கா அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இரு நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக தம்பியிடம் கூறி சென்ற நிவேதா திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. லோகநாதன் புகாரில் வைகை அணை போலீசார் விசாரிக்கின்றனர்.