தேனியில் கேமராக்கள் சேதம் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
தேனி : தேனி பஸ் ஸ்டாண்டை சுற்றி உள்ள பகுதிகளில் போலீசார் அமைத்துள்ள கேமராக்களை சேதப்படுத்துவது தொடர்கிறது. இதனால் அப்பகுதிகளில் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் போலீஸ் சார்பில் 16க்கும் மேற்பட்ட நவீன சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தினர். சில மாதங்களுக்கு முன் சேதமடைந்த கேமராக்களை சீரமைத்து, கேமராக்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தனர். இவற்றை எஸ்.பி., சிவபிரசாத் துவக்கி வைத்தார். இந்த கேமராக்களில் நைட் விஷன் டெக்னாஜியுடன் உள்ளதால் இரவிலும் துல்லியமாக பதிவாகும் என போலீசார் கூறினர். ஆனால், இந்த கேமராக்களை மீண்டும் சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர்.
குறிப்பாக பஸ் ஸ்டாண்ட் அன்னஞ்சி ரோடு சந்திப்பில் உள்ள 3 கேமராக்கள் வானத்தை நோக்கி, தரையை பார்த்தும் திருப்பபட்டுள்ளது. சிவாஜிநகர் ரோட்டில் உள்ள கேமராக்கள், போடி பஸ் நிறுத்தும் பகுதியில் உள்ள கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பஸ் ஸ்டாண்ட், சுற்றி உள்ள பகுதிகளில் வழிப்பறி, போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரிக்க துவங்கி உள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டிற்கு வரும் பயணிகள்,பொது மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி வருகிறது. கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.