பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்
கூடலுார்: மலைப்பாதையில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
சில நாட்களாக குமுளி லோயர்கேம்ப் மலைப்பாதை, குமுளியில் இருந்து மூணாறு, கட்டப்பனை, வண்டிப்பெரியாறு செல்லும் மலைப் பாதைகளில் கடும் பனிமூட்டம் உள்ளது. வளைந்து செல்லும் மலைப் பாதைகளில் பனிமூட்டம் இருப்பதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இரவு மற்றும் காலையிலிருந்து மதியம் 12:00 மணி வரை பனிமூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல தமிழக, கேரள போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.