வருவாய் துறை அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
தேனி : தேனி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 2025-2026ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்விற்கான தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட தலைவராக ராமலிங்கம், செயலாளராக சுரேந்திரன், பொருளாளராக சதீஷ்குமார், துணைத்தலைவர்களாக முகமது ரியாஸ், சங்கர், ஜாகீர்உசேன், சிவன்காளை, ஒச்சாத்தேவன், இணைச்செயலாளர்களாக முத்துராமன், வீரக்குமார், மகிமைபிரபு, அகிலா, கருப்பணராஜா தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பதிவியேற்பு விழா ஓட்டலில் நடந்தது.
விழாவிற்கு சங்க மாநில தலைவர் முருகையன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் தமிழரசன் முன்னிலை வகித்தார்.