மக்களுடன் முதல்வர் முகாம் நடத்த ஏற்பாடு
தேனி: மாவட்டத்தில் மலைகிராமங்கள், பின்தங்கிய பகுதிகளை தேர்வு செய்து மக்களுடன் முதல்வர் முகாம் நடந்த ஏற்பாடு நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடந்தாண்டு நகராட்சி, பேரூராட்சி, ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் அனைத்து அரசுத்துறைகள் சார்பில் மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களில், உரிய ஆவணங்கள், சான்றுகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் பல தீர்வு காணப்பட்டன. மீண்டும் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்துவதற்கான பணிகள் துவங்கி உள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், ‘பொருளாதாரம், கல்வி உள்ளிட்டவற்றில் பின்தங்கிய பகுதிகள், மலை கிராமங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் மட்டும் முகாம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது,’ என்றனர்.