வாக்காளர் அடையாள அட்டைகள் வினியோகம்
தேனி: மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பத்தவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கியது.
மாவட்டத்தில் 2024 அக்.,29ல் வரைவு வாக்காளர்பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து புதிய வாக்காளர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றிற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் ஏராளமானேர் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டு ஜன., 6ல் இறுதி வாக்காளர்பட்டியில் வெளியிடப்பட்டது. சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்த 27,605 பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் தேர்தல் பிரிவு அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டு சரிபார்க்கப்பட்டன. இவை தபால் அலுவலகங்கள் மூலம் வீடுகளுக்கு ‘டெலிவரி’ செய்யப்பட உள்ளன.