பசுக்களுக்கு குடற்புழு நீக்கி சினை பிடிக்க சிகிச்சை
தேனி; தேனி பள்ளபட்டியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் பசுக்களுக்கு குடற்புழு நீக்கி சினை பிடிக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
தமிழக தேசிய விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சீனிராஜ். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ’30 சதவீதம் பசுமாடுகள் சினைப்பிடிப்பதில் சிரமங்கள் உள்ளதாகவும் பொருளாதார பாதிப்பு ஏற்படுவதாக’, தெரிவித்தார். கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கோயில்ராஜா சிறப்பு மலட்டு நீக்க சிகிச்சை முகாம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி பள்ளபட்டியில் இணை இயக்குனர் தலைமையில் சிறப்பு மலட்டு நீக்க சிகிச்சை முகாம் நடந்தது.
பெரியகுளம் கால்நடைத்துறை உதவி இயக்குனர் சுப்பிமணி முன்னிலை வகித்தார்.முகாமில் பங்கேற்ற 61 பசுக்களுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு, இலவசமாக தாதுஉப்பு பொட்டலங்கள் உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டன. சினைப்பருவம் அடையாத 27 கறவைபசுக்களுக்கு அல்ட்ரா சோனாகிராபி’ உபகரணத்தின் உதவியுடன், கர்ப்பபையின்தன்மை, உடற்கூறுகண்டறியப்பட்டு கர்ப்பப்பை வளர்ச்சிக்காகவும், சினைப்பருவம் அடைவதற்கு ஏற்ற மருந்துகள் வழங்கப்பட்டன. விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டன.