நித்யகல்யாணி , நாட்டு கறிவேப்பிலை குறித்து விழிப்புணர்வு
தேனி அல்லிநகரம் நகராட்சி மிரண்டா 2வ தெரு ராஜாங்கம். இவர் தனது வீட்டில் சீத்தா மரம், நித்யகல்யாணி, சோற்றுக்கற்றாழை, ‘குரோட்டன்’ செடிகள் வளர்த்து, அதன் சிறப்புகள் குறித்து மனைவி மீனா, மகன் ஹிருத்திக்ராஜாவிடம் எடுத்துக் கூறுவது
டன், அருகில் வசிப்பவர்களிடம் மாடித்தோட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஹிருத்திராஜா : எனது பெற்றோர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வீட்டின் முற்றத்தில் 2 தென்னை மரங்கள் வளர்ந்திருந்தனர். கட்டுமானத்திற்காக அதனை அகற்றிவிட்டோம்.
தற்போது சீத்தா மரத்தில் காய்கள் காய்த்து தொங்குகின்றன. மேலும் நித்ய கல்யாணி செடி அடர்ந்து வளர்ந்துள்ளது. அதில் அதிகாலையில் மலரும் பூக்களை பறித்து, எனது தாய் பூஜைக்கு பயன்படுத்துவார். உடல் குளிர்ச்சிக்கு அடிக்கடி சோற்றுக்கற்றாழை ஜெல் எடுத்து ஜூஸ் எடுத்து குடித்து வருகிறேன். மேலும் நாட்டு கறிவேப்பிலை வீட்டின் முற்றத்தில் 2 இடங்களில் உள்ளன. இதனை எடுத்து தினமும் உணவில் சேர்ப்பதால் ஆரோக்கியமாக உள்ளோம்.
முடி உதிர்வது குறையும் என டாக்டர்களின் ஆலோசனைபடி கறிவேப்பிலை சுத்தம் செய்து, சாப்பிட்டு வருகிறோம்.
தாயார் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார். வீட்டிற்கு ஒரு மரமாவது அவசியம் வளர்த்தால், மாறுபட்ட சீதோஷ்ண நிலை மாறும்.
அதை அனைவரும் கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்., என்றார்.
விழிப்புணர்வு
ராஜாங்கம்: நீண்ட நாட்களாக தேனி அருகே உள்ள நாகலாபுரத்தில் எங்கள் உறவினர் வீட்டுத்தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார். அதில் கிடைக்கும் காய்கறிகளை அவர் சமையலுக்கு பயன்படுத்துகிறோம். வேதிப்பொருட்கள், ரசாயண உரங்களை அவர்கள் பயன்படுத்தாததால் ஆரோக்கியமான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் கிடைக்கின்றன.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட்டதால், விரைவில் நாங்களும் ஒரு எங்கள் வீட்டு முற்றத்தில் தோட்டம் அமைக்க உள்ளோம்.’, என்றார்.