மாநில அறிவியல் மாநாட்டிற்கு தேனி மாணவர்கள் தேர்வு
தேனி: மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வாகினர்
தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட அளவில் கடந்த மாதம் நடந்தது. இதில் வெற்றி பெற்ற தேனி மாவட்டத்தை 4 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தென்காசியில் நடந்த மண்டல அளவிலான அறிவியல் மாநாட்டில் பங்கேற்றனர். இதில் பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியை சேர்ந்த அபிநயா, ஜீவபாரதி மாநில அளவிலான குழந்தைகள் மாநாட்டிற்கு தேர்வாகினர். இவர்கள், ‘எங்கள் கிராமத்தில் குறையும் நீர் ஆதாரங்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர். மாநில போட்டி புதுக்கோட்டையில் பிப்.15, 16ல் நடக்கிறது. வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அறிவியல் மன்ற நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்