பூலாங்குறிச்சி அரசு கல்லூரியில் க வுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருப்புத்தூர், பிப்.6: திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சி அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்புத்தூர் அருகே பூலாங்குறிச்சி வ.செ.சிவ அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
அதுவரை யுஜிசி பரிந்துரைத்த ஊதியம் ரூ.57,500 வழங்க வேண்டும் ஆகிய இரு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவுரவ விரிவுரையாளர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் வகுப்புகளை புறக்கணித்து 3வது நாளாக காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உடனடியாக தமிழக அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் என போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.