அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் சிறை செல்வார் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு
ஜாமினில் வெளி வந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கிய நிலையில் மீண்டும் சிறை செல்வார் என போடியில் நடந்த அ.தி.மு.க., பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
அவர் பேசியதாவது : லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வை எதிர்த்து தேனியில் தினகரனும், ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வமும் போட்டி யிட்டனர். தோல்வி அடைந்த பின் ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும். கட்சியை ஒன்று படுத்துவோம் என்கிறார். எம்.ஜி.ஆர். ஜெ., உடன் இருந்தவர்கள் தான் தற்போது பழனிசாமி பக்கம் உள்ளோம்.
தி.மு.க.,வை எதிர்த்து ஓ.பி.எஸ்., ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் போது வாழ்த்து தெரிவிக்கிறார். பா.ஜ., வுடன் அ.தி.மு.க., ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என கூறியவர் பழனிச்சாமி. பா.ஜ., வுக்கு மறைமுகஆதரவு தரும் ஸ்டாலின் தான் பி.டீம். கொள்ளை அடித்த பணத்தை வைத்து இனி ஆட்சியைப் பிடித்து விடலாம் என முதல்வர் ஸ்டாலினின் தப்பு கணக்கு எடுபடாது. செந்தில் பாலாஜி குற்ற வழக்கில் இருந்து விடுபட்டால் வரவேற்கலாம். ஜாமினில் வெளி வந்தவருக்கு வரவேற்பு, அமைச்சர் பதவி. ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி மீண்டும் சிறை செல்வார். விலைவாசி உயர்வு, மக்களுக்கு ஏற்பட்டுள்ள கொடுமைகளுக்கு எதிராக எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 2026ல் நல்ல கூட்டணியுடன் அ.தி.மு.க., ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.
பங்கேற்பு: பொதுக்கூட்டத்திற்கு தெற்கு நகர செயலாளர் மாரியப்பன், வடக்கு நகர செயலாளர் சேதுராம் தலைமை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முத்தையா, மாவட்ட துணை செயலாளர் சற்குணம், ஒன்றிய செயலாளர் பாண்டித்துரை, நகர துணை செயலாளர் வேல்முருகன், பேரூர் செயலாளர்கள் நித்தியானந்தம், குறிஞ்சி மணி முன்னிலை வகித்தனர். பொதுக் குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.