மண் அள்ளிய ஒருவர் கைது
திருப்புவனம்,பிப்.6: கிளாதிரி தோட்டக்கலை துறைக்கு சொந்தமான தோட்டத்திற்கு அருகே திருட்டுத்தனமாக செம்மண் அள்ளியவர்களை போலீசார் கைது செய்தனர். பூவந்தி அருகே கிளாதிரியில் நேற்று இரவு தனியாருக்கு சொந்தமான நிலத்தில் ஜேசிபி இயந்திரம் வைத்து லாரியில் அனுமதியின்றி செம்மண் அள்ளுவதாக போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது கிடைத்த தகவலை அடுத்து போலீசார் விரைந்தனர். போலீசார் வருவதை பார்த்த இருவர் ஓடினர். ஜேசிபி டிரைவர் மதுரை வரிச்சியூர் சுரேஷ்குமாரை(34) பிடித்தனர்.
இதுகுறித்து கிளாதிரி வி.ஏ.ஓ விக்னேஷ் பிரபு கொடுத்த புகாரின் பேரில், ஜேசிபி உரிமையாளர் கீரனூர் துரைசாமி, லாரி உரிமையாளர் சொக்கையன்பட்டி முனீஸ்வரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.