டூவீலர்கள் மோதல் ; கண்டக்டர் காயம்
பெரியகுளம்; மேல்மங்கலம் அம்மா பட்டி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 58. பெரியகுளம் அரசு போக்குவரத்து டெப்போவில் பஸ் கண்டக்டர். இரவு பணிக்கு செல்வதற்கு வீட்டிலிருந்து டெப்போவிற்கு டூவீலரில் சென்றார்.
டெப்போ அருகே பின்னால் வந்த டூவீலர் மோதியது. இதில் காயமடைந்த ஆறுமுகம், மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து ஏற்படுத்திய தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனிடம் 40. வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.