தி.மு.க., அலுவலகத்தில் திருடிய இருவர் கைது
தேனி; தேனி நகர தி.மு.க., அலுவலகம் என்.ஆர்.டி., நகரில் குடியிருப்பு பகுதியில் உள்ளது. கடந்த ஜன.,27 ல் அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள் ரூ.40ஆயிரம் மதிப்புள்ள 3 லேப்டாப்களை திருடி சென்றனர். நகர செயலாளர் நாராயணபாண்டியன் புகாரில் போலீசார் விசாரித்தனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது மதுரை பார்த்திபன 35, மாங்குடி பிரேம்குமார் 32,என தெரிந்தது. மதுரையில் பதுங்கியிருந்த இருவரையும் இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறுகையில், இருவர் மீது 15க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.
இவர்கள் ஜெயிலில் அறிமுகமாகி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்,’ என்றனர்.