சின்னமனூரில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
சின்னமனூர், பிப். 7: தேனி மாவட்டம், சின்னமனூரில் தனியார் நிறுவனம் மூலம் சீப்பாலக்கோட்டை சாலையில் டெலிபோன் கேபிள் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சாலை ஓரத்தில் இயந்திரம் மூலம் துளையிட்டதில் நேற்று முன்தினம் சொக்கநாதபுரம் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.
சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் நேற்று முன் தினம் இரவோடு இரவாக குழாய் உடைப்பை சரிசெய்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.