மூணாறு ஹைடல் சுற்றுலா பூங்காவில் கண்காட்சி
மூணாறு, பிப். 8: கேரள மாநிலம் மூணாறில் தொழில்துறை,வணிகத் துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து ஏற்பாடு செய்யும் மூணாறு எக்ஸ்போ 2025 தொழில்துறை கண்காட்சி மற்றும் சந்தைப்படுத்தல் கண்காட்சி மூணாறு ஹைடல் சுற்றுலா பூங்காவில் மூணாறில் துவக்கம் குறிக்கப்பட்டது. பிப். 6 முதல் பிப். 10ம் தேதி வரை நடைபெறுகிறது.
பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும். மாவட்டத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வேளாண்மை, இயந்திரங்கள், உணவு மற்றும் பதப்படுத்தும் நிறுவனங்கள், கைவினைப்பொருட்கள், கைத்தறி பொருட்கள், ஜவுளி மற்றும் மசாலாப் பொருட்கள் நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைக்கப்படும். இந்த கண்காட்சியின் பாகமாக தொழில்முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொழில்முனைவோர் உதவி மையம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். கண்காட்சிக்கு பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.