அல்லிநகரம் தெருக்களில் கழிவு நீரோடைகளை சீரமைக்க கோரிக்கை
தேனி, மார்ச் 18: தேனி-அல்லிநகரத்தில் உள்ள தெருக்களில் உள்ள கழிவுநீரோடைகளில் மண் மேவியதால் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் செல்லும் நிலை உள்ளதால் கழிவுநீரோடைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தேனி நகராட்சி 5 வது வார்டு உறுப்பினரான கிருஷ்ணபிரபா தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையர் ஏகராஜூவிடம் கோரிக்கை மனு அளித்தார். இம்மனுவில் கூறியிருப்பதாவது, அல்லிநகரம் பகுதியில் உள்ள பாண்டியன்நகர், கிணற்றுத்தெரு, ஓம்சக்திகோவில்தெரு, மச்சால்தெரு, செங்கோல்தெரு, ரெங்கசமுத்திரம் தெரு ஆகிய தெருக்களில் உள்ள கழிவு நீரோடைகளில் மண்மேவி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீரோடைகளில் இந்து கழிவு நீர் வெளியேறி சாலைகளில் செல்லும் அவலம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம், மண் மேவி அடைப்பு ஏற்பட்டுள்ள கழிவுநீரோடைகளை தூர்வாறி சீரமைக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.