நாளை ஆண்டிபட்டியில் உங்களைத் தேடி முகாம்
தேனி: ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை(பிப்.,26) காலை 9:00 மணி முதல் பிப்.,27 காலை 9:00 மணி வரை உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம் நடக்கிறது.
கலெக்டர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் கல்வி நிலைய வளாகங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், ஓட்டல்கள், உர விற்பனை கூடங்களில் ஆய்வு நடத்த உள்ளனர்.
நாளை மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கும் முகாமில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனுக்களை நேரில் அளிக்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.