நகர்மன்ற உறுப்பினர் தர்ணா
தேனி, பிப். 8: பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் தர்ணா போராட்டம் நடத்தினார். பெரியகுளம் நகராட்சி 13வது வார்டு கவுன்சிலராக சிபிஎம் கட்சியைச் சார்ந்த மதன்குமார் உள்ளார். நேற்று கவுன்சிலர் மதன்குமார் பேரூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஆணையர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
அப்போது 13வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மின்மோட்டார் இயங்காததால், இறப்பு நிகழ்ச்சிக்கு சடங்குகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், மின் மோட்டாரை பழுது நீக்க வேண்டும் , இரவு நேரத்தில் எரியாத மின் விளக்குகளை பொழுது நீக்கி, மின் விளக்குகளை எரியச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் தனது 13வார்டில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.