நுாறு சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
தேனி: தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் நுாறு சதவீத தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தலைமை வகித்தார். கலெக்டர் ஷஜீவனா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலை வகித்தனர். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ், கேடயம், வழங்கப்பட்டது.
விழாவில் எம்.பி., தங்கதமிழ் செல்வன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கமிஷனர் சம்பத், மாவட்ட அலுவலர் வெங்கடாசலம், துணை இயக்குநர் ரமணகோபால், கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குநர் முனிசாமி, சி.இ.ஒ., இந்திராணி, எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.