போட்டித்தேர்வு விழிப்புணர்வு முகாம்
தேனி; மாநில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஏப்ரலில் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இத்தேர்வில் ஆதரவற்ற விதவைகள் பயன்பெறும் வகையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மார்ச் 4ல் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் பாடக் குறிப்புகள் வழங்கப்பட உள்ளன.
பங்கேற்க விரும்பும் ஆதரவற்ற விதவை சான்று பெற்றுள்ள பெண்கள், தங்களது கல்வி சான்றிதழ்கள், ஆதார், புகைப்படத்துடன் பங்கேற்கலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 63792 68661 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.