பள்ளி அருகே குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேடு
கம்பம் : சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 10 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இப் பள்ளியின் சுவரை ஒட்டி இப்பகுதியில் வசிப்போர் குப்பையை பள்ளிஅருகே கொட்டி வருகின்றனர். இது குறித்து பள்ளியின் ஆசிரியர்கள் ஊராட்சியில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
இதனால் குப்பைகள் கொட்டுவதும் தொடர்கிறது. குப்பையால் ஏற்படும் துர்நாற்றம் பள்ளியில் படிக்கும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் முகம் சுளிக்க வைக்கிறது. பள்ளி சுவற்றின் அருகில் குப்பை கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.