Saturday, April 19, 2025
மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்- -குமுளி நான்கு வழிச்சாலையாக மாற்ற அனுமதி

கம்பம்: திண்டுக்கல்- – குமுளி வரை நான்கு வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. டெண்டர் இறுதியானவுடன் பணிகள் துவங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

திண்டுக்கல் முதல் கொல்லம் வரை தேசிய நெடுஞ்சாலை எண் 183 ன் கீழ் வருகிறது. திண்டுக்கல் முதல் குமுளி வரை மாநில நெடுஞ்சாலை எண் 220 ன் கீழ் இருந்தது. கடந்த 2010 ல் ஆய்வு செய்த தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் திண்டுக்கல் முதல் கொல்லம் வரை இரு வழிச்சாலையாக மாற்ற பரிந்துரை செய்தனர்.

முன்னதாக நான்கு வழிச்சாலைக்கென நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது.

வாகன போக்குவரத்தை வைத்து முடிவு எடுக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருவழிச்சாலையாக உள்ளது. அதன் பின் அதிகரித்துள்ள வாகன போக்குவரத்து, ஏற்பட்ட விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

திண்டுக்கல் முதல் குமுளி வரை 125 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக மாற்ற டெண்டர் கோரும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது.

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை மதுரை கொச்சின் தேசிய நெடுஞ்சாலை எண் 85 மற்றும் திண்டுக்கல் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை எண் 185 என இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன.

மதுரையிலிருந்து தேனி, போடி, தேவிகுளம், மூணாறு, மூவாற்றுப்புழா, கொச்சின் வரை எண் 85 ஆக உள்ளது. தற்போது இந்த ரோடு மதுரையிலிருந்து சிவகங்கை வழியாக தொண்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் முதல் குமுளி வரை நான்கு வழிச்சாலை, திண்டுக்கல்லில் துவங்கி தேனி, கம்பம், குமுளி, வண்டிப் பெரியாறு, கோட்டயம், கொல்லம் வரை உள்ளது. தற்போது திண்டுக்கல் முதல் குமுளி வரை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுவதால் இனி போக்குவரத்து எளிதாக இருக்கும். குறிப்பாக சபரிமலை சீசனில் பக்தர்கள் எளிதாக சென்று வருவார்கள். நில ஆர்ஜிதம் ஏற்கெனவே செய்யப்பட்டிருப்பதால், பெரிய அளவில் பிரச்னைகள் இருக்காது என்றும், டெண்டர் இறுதியானவுடன் பணிகள் துவங்கும் என்றும் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *