பறிமுதல் வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் பாழாகும் அவலம்
மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல், குற்றவழக்குகளில் சிக்கிய வாகனங்கள், விபத்தில் சிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
இந்த வாகனங்கள் தகுந்த பாதுகாப்பு இன்றி ஸ்டேஷன்களில் உள்ள காலியிடங்களில் நிறுத்தப்படுகின்றன. இவைகள் ஆண்டுக்கணக்கில் மழை, வெயிலில் பாதித்து பல வாகனங்கள் துருப்பிடித்து காய்லாங் கடைக்கு செல்லும் நிலையில் உள்ளன. இதனால் ஸ்டேஷன் வளாக பகுதி விஷபூச்சிகள் தஞ்சமடையும் இடமாக மாறி உள்ளன. எனவே, பறிமுதல் வாகனங்களை முறையாக ஏலம் விட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.